districts

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராட்சத மின் விசிறி

சென்னை,மே 13-

   சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் கோடை வெயிலை யொட்டி பயணிகள் வசதிக்காக பெரிய வடிவிலான 4 மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன.

   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணி கள் வந்து செல்கிறார்கள். இதனால், இரவு, பகல் எப்போதும் ரயில் நிலை யம் பரபரப்பாக செயல் பட்டு வருகிறது. இந்த நிலை யில் கோடை விடுமுறையை யொட்டி பயணிகள் கூட்டம் ரயில் நிலையங்களில் அலைமோதி வருகிறது. கோடைவெப்பத்தையொ ட்டி ரயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் 4 ராட்சத மின் விசிறிகளை அமைத்துள் ளது. தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட மின்விசிறி களால் பயணிகள் இளைப் பாறி வருகின்றனர்.