districts

img

தமிழக சந்தையில் நுழையும் ஜெமினி சமையல் எண்ணை

சென்னை, ஜுலை11-  இந்தியாவின் முதன்மையான சூரிய காந்தி எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி எடிபிள்ஸ் மற்றும் ஃபேட்ஸ் இந்தியா லிமிடெட் தமிழ்நாடு சந்தையில் நுழைந்துள்ளது. இதற்காக பீ-ரைட் (Be-Rite) என்ற பெயரில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.  உயர்தர பீ – ரைட் தயாரிப்புகள் தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் என்று நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் பி. சந்திர சேகர ரெட்டி கூறினார்.  தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய் வகையினத்தில் 42விழுக்காடு  பங்கினை கொண்டதாக சூரியகாந்தி எண்ணெய் உள்ளது என்றும் அவர் கூறினார். 83விழுக்காடு வீடுகளில் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10முதல் 15 விழுக்காடு சந்தைப்பங்கை கைப்பற்றுவதே தங்களது நிறுவனத்தின இலக்கு என்றும் அவர்மேலும் தெரிவித்தார்.