districts

img

குப்பை கட்டிட கழிவு கொட்டுவோருக்கு கூடுதலாக அபராதம்

சென்னை,ஜூன்11-

    குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டு வோருக்கு கூடுதலாக அபராதம் விதிக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, போஸ்டர் ஒட்டுவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளது.  

    சென்னை நகரின் அழகை பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் அந்தந்த மண்டலங்களில் தனிக்குழு அமைக்கப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அபராதம், வழக்கு, எச்சரிக்கை என அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இவற்றின் மூலம் மாதம் ரூ.63 லட்சம் வசூலிக்க முடிவு செய்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த மே 12 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை குப்பைகொட்டியோரிடம் ரூ.13 லட்சத்து 69 ஆயிரம், கட்டிட கழிவு கொட்டியோரிடமிருந்து ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்து 165, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது 674 வழக்கு மற்றும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.