கடலூர்,டிச.17- என்எல்சி நிறுவனம் உருவாக வித்திட்டவர் தோழர் பி. ராமமூர்த்தி என்று நெய்வேலி நடை பெற்ற சொற்பொழிவு கூட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் பேசினார். நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ராமமூர்த்தி நினைவு தின சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் பி.ராம மூர்த்தி பன்முகப் பார்வை யோடும், பன்முக கலாச்சாரத்தோடும் வாழ்ந்த வர். அவரிடம் ஏராளமான படிப்பினைகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. நெய்வேலியில் கிடைத்த பழுப்பு நிலக்கரியை பயன்படுத்த முடியாது, லாபகரமாக செயல்பட முடியாது என்று அப்போதைய இந்திய தொழில் துறை அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியா கூறினார். அதை நம்பி மத்திய அரசும் இதனை கைவிட முடிவெடுத்தது. இதனை அடுத்து பி.ராம மூர்த்தி கிழக்கு ஜெர்மனிக்கு தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்க சென்றபோது அங்கு பழுப்பு நிலக்கரி வெட்டும் சுரங்கத்தில் பொறியாளர்களுடன் விவாதித்தார். நெய்வேலி யில் வெட்டப்படும் பழுப்பு நிலக்கரியை உருக்கு ஆலைக்கு எரிசக்தியாக பயன்படுத்துகிறோம் என்றும், இதன் மூலம் கிடைக்கும் ஏராளமான உப பொருட்களை விற்பனை செய்கிறோம் என்றும் ஜெர்மன் பொறியாளர்கள் பி.ராமமூர்த்தியிடம் தெரி வித்தனர். நாடு திரும்பிய பி.ராமமூர்த்தி மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தை கைவிடக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். அதேபோல் 1955 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த நம்பியார் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாவை சந்தித்து நிறுவனத்தை நடத்த வேண்டும்
என்று வலி யுறுத்தி பேசினார். இதனை யொட்டி 20.6.1956 இல் அதி காரப்பூர்வமாக மத்திய அரசு என்எல்சி நிறு வனத்தை ஏற்பதாக அறி வித்தது. சோவியத்து யூனி யன் பொறியாளர்கள் நெய்வேலி வந்து தங்கி முதல் அனல் மின் நிலைய கட்டுமான பணியை துவக்கினர். இப்படி பல்வேறு முயற்சிகளை செய்து என்எல்சி நிறுவனம் உருவாவதற்கு வித்திட்டவர் தோழர் பி.ராமமூர்த்தி. அதேபோல் திருச்சி பிஹெச்எல் நிறுவனத்தை பன்னாட்டு கம்பெனி அப கரிப்பதை தடுத்து நிறுத்திய வர் பி. ராமமூர்த்தி. தொழிற்சங்க தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பின ராக, அரசியல் பிரச்சினை களுக்காக போராடியவராக, கலாச்சாரம் பண்பாட்டு மொழி உரிமைகளுக்காக குரல் கொடுத்தவராக பன்முகத் தன்மையோடு விளங்கியவர் பி. ராம மூர்த்தி என்று சொன்னால் மிகை ஆகாது. இவ்வாறு ஜி. ராம கிருஷ்ணன் பேசினார். முன்னதாக நெய்வேலி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், எஸ்.திரு அரசு, வி.உதயகுமார், பி.தேன்மொழி, என்.எஸ் அசோகன், நெய்வேலி நகர செயலாளர் ஆர். பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.ஜெய ராமன், வி.மேரி, சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.