districts

img

போராட்டக் களத்திலிருந்து

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காஞ்சி - காரப்பட்டு கூட்டு சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார் உட்பட பலர் பேசினர்.


அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் தெற்கு, ஆம்பூர், குடியாத்தம் ஆகிய 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி உள்ளிட்ட பலர் பேசினர்.


இளைஞர்களின் வாழ்வை சீரழிக்க கொண்டு வரும் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து வாலிபர், மாணவர், மாதர் சங்கங்களின் சார்பில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது.


அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூரில் மாநகரச் செயலாளர் சிபி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் பேசினர்