districts

img

இலவச இதய பரிசோதனை முகாம்

சிதம்பரம், ஜூலை 17- சிதம்பரம் ராமசாமி மேல்நிலைப்பள்ளியில் சென்ட்ரல் ரோட்டரி சங்க மும், பழனிபாபு அணி வணிகமும், சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையும் இணைந்து இலவச இதய பரிசோதனை முகாம் நடத்தின. இந்த முகாமிற்கு  சிதம்ப ரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜ சேகரன் தலைமை தாங்கி னார்.  ரோட்டரி மண்ட லத்தின் துணை ஆளுநர் தீபக்குமார், மாவட்ட இருதய சிகிச்சை முகாம் தலைவர் பழனியப்பன், இராமசாமி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி பாபு அணி வணிகத்தின் உரிமையாளர் பா.பழனி, ஜோதிமணி பழனி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் மணி மாறன் வாழ்த்துரை வழங்கி னார்.  இம்முகாமில் சிதம்ப ரம் மற்றும் சுற்றுவட்ட பகுதி களில் இருந்து  250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு இதய  மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.  இவர்களில் 50 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அனை வருக்கும் இலவச அறுவை சிகிச்சை சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் நடைபெறுகிறது.