districts

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

சென்னை, மார்ச் 19- குன்றத்தூர்  பேரூந்து பணிமனை அருகில் நற்பவி ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் வெள்ளியன்று ( மார்ச் 18) தொடங்கியது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. முகாமில் ஆயுர்வேதா, பஞ்சகர்மா, யோகா மற்றும் இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் வெரிகோஸ் வெயின்ஸ் 5 நிலைகளுக்கும் டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். சிகிச்சை முகாம் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.