districts

img

சுடுகாட்டுப் பாதையை மறித்து இரும்பு வேலி: கிராம மக்கள் ஆவேசம்!

விழுப்புரம், ஏப்.19- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட நாயனூர் கிராமத்தில் சுமார் 2000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சுடு காட்டுக்கு முறையான பாதை இல்லாததால் இறந்தவர்கள் உடலை விவசாய நிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே சுடு காட்டிற்கு தனியாக பொது பாதை அமைத்துத்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1994ஆம் ஆண்டு போராடியதன் விளை வாக, ஓடை புறம்போக்கு ஒதுக்கப்பட்டு சுடுகாட்டிற்கு பொது பாதை அமைக்கப்பட்டது. பின்னர் சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டது. அந்த பாதை யில் விவசாயிகளும் வண்டி ஓட்டி செல்லவும், விளையும் பொருட் களை எடுத்து செல்லவும், ஆடு, மாடுகள் சென்று வரவும் பயன்  படுத்தி வந்தனர்.   இந்நிலையில், கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பொது பாதையை (ஓடை புறம்  போக்கு) மறித்து சிலர் அது தங்கள் இடம் எனக் கூறி இரும்பு கேட் அமைத்துள்ளனர். மேலும் சில இடங்களில் பள்ளம் தோண்டி மக்கள் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தி விட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கண்டாச்சிபுரம் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்த னர். இதையடுத்து வட்டாட்சியர் பொது சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்துள்ள கோபி, சரன், மற்றும் கிராம பொதுமக்களை அழைத்து கடந்த 29.6.2021 அன்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கேட்டை அப்புறப்படுத்த சம்மதித்து 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு இரு தரப்பினரும் சம்மதித்து, எழுத்து பூர்வமாக கையெழுத்திட்டனர். ஆனால், இதுவரைக்கு அந்த கேட்டை அகற்றப்படவில்லை. இத னால் சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல முடி யாமல் கிராம மக்கள் அவதிப்படு கின்றனர். இந்நிலையில் கேட்டை அப்புறப்படுத்தக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று (ஏப் 20) இரும்பு கேட்டை அகற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்களன்று மீண்டும் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் கே. சுந்தரமூர்த்தி, வட்டச் செயலாளர் எஸ்.கணபதி ஆகி யோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது ஒரு மாத காலத்திற்குள் அந்த ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தை அளவீடு செய்து பொது பாதை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் தற்காலிகமாக போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.