districts

img

பழங்குடியின மாணவர்களுக்கு ஒரே நாளில் சாதி சான்று: முதல்வர் நடவடிக்கை

விழுப்புரம், ஜூலை 10- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார். அவர் செல்லும் வழியில், செஞ்சி வட்டம் செம்மேடு கிராமம் பழங்குடி யினத்தை சேர்ந்த முரு கன் மகன்வாசன், மகள் பூஜா ஆகியோர் முதல மைச்சரிடம் கோரிக்கை  மனு ஒன்றை கொடுத்தனர்.  அந்த மனுவில், பட்டி யில் இன வகுப்பு சான்று கேட்டு மனு செய்து  7 ஆண்டுகளை கடந்து விட்டது. இதுவரைக்கும் அதி காரிகள் வழங்காமல் உள்ள னர். இதனால், அரசு வழங்கும் உதவித் தொகை மட்டுமல்ல உயர்கல்விக்கும் செல்லமுடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே, தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்க முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர். அம்மனு வினை பரிசீலித்த முதல மைச்சர் உரிய விசார ணை மேற்கொண்டு பட்டி யல் இன வகுப்புச் சான்றி தழ்கள் வழங்க விரை வாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதி காரிகளுக்கு உத்தர விட்டார்.  இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் போது மீண்டும் அதே வழியாக வந்த முதலமைச்சர், பழங்குடி யின மாணவர்கள் வாசன், பூஜா ஆகியோரை சந்தித்து பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், விழுப்பு ரம் மாவட்ட ஆடசியர்ர் மோகன் மற்றும் மாண வரின் பெற்றோர் உடனி ருந்தனர் பல ஆண்டுகாலமாக சாதிச் சான்று பெற முடி யாமல் தவித்த பழங்குடி மாணவர்கள் முதல மைச்சரிடம் மனு கொடுத்த அடுத்த நாளே, அவரது கையாலேயே சான்று வழங்கிய நிகழ்வு பழங்குடியின சமூக மக்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாதிச் சான்று பெற்றி ருக்கும் பூஜா, 12 ஆம் வகுப்பு படித்து உயர்க் கல்லூரியில் சேர இருக் கிறார்.  வாசன் சத்திய மங்கலம் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரு கிறார். தமிழ்நாடு முழுவதும் ‘எஸ்டி’சாதி சான்று கேட்டு மாவட்டந்தோறும் மனு செய்திருக்கும் ஆயிரக்கண க்கான பழங்குடி மக்களை ஆண்டுக்கணக்காக காத்திருந்தாலும் கிடைக்க வில்லை. மலைவாழ் மக்கள் சங்கமும் தொடர்ந்து போராட்டம் நடத்தி யும்,  வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பழங்குடி யினர் நலத்துறை மாநில உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டும் வருகிறார்கள். ஒரிரு இடங்க ளில் யானை பசிக்கு சோளை பொறியாக வழங்கு கிறார்கள். எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிச் சான்று கேட்டு மனு செய்து காத்திருக்கும் அனை வருக்கும் செஞ்சி மாணவர்க ளுக்கு வழங்கியதுபோன்று ஒரே நாளில் முதலமைச்சேர வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தி ருக்கிறது.

;