districts

டெல்டாவில் உணவு பொருள் பூங்கா!

சென்னை,ஏப்.26 திருவாரூர், நாகை மாவட்டங்கள் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதிகள். இங்கு வைக்கோல் அதிகம் கிடைப்பதால் காகித ஆலை அமைக்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், சிபிஎம் உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர்  கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,“வைக்கோல் உற்பத்தி பருவ கால தொழில் என்பதாலும் பொரு ளாதார ரீதியாக பல்வேறு சிக்கல் உள்ளதாலும் காகிதம் ஆலை அமைக்க சாத்திய கூறுகள் இல்லை. ஆனாலும், உணவு பொருள் பூங்காவிற்கு  தகுந்த இடமாக உள்ளதால் அதுகுறித்து அரசு பரிசீலிக்கும்” என்றார். அதிமுக உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு உலகளாவிய சந்தை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். நெல்லை மாவட்டத்தை ஒட்டியிருக்கக்கூடிய பகுதியில் நிறைய வாழை மரங்கள் உள்ளன. எனவே அதை மையமாக கொண்டு வாழை மரங்கள் அல்லது வாழை நாரை மையமாக வைத்து தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. தனியார் முன்வந்தாலும் அரசு அனுமதி அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

;