சென்னை:
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேட்டூர் அணை திறக்க 18 நாட்களே உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களான 7 மாவட்டங்களில் அனைத்து கால் வாய்களையும் தூர்வாரும் பணி நிறைவடைந்துவிடுமா என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் விவசாய சங்க பிரதிநிதிகளையும் கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற செய்து கால்வாய் தூர்வாரும் பணிகளை முறைகேடுகளின்றி விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.