districts

சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு தனி வட்டியிலிருந்து விலக்கு

சென்னை, செப். 29 - சொத்துவரியினை செலுத்தாத உரிமையாளர்களுக்கு விதிக்கப் படும் 2 விழுக்காடு தனி வட்டி ரத்து  செய்ய மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் சுருக்கம் வருமாறு: சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது. உயர்த்தப் பட்ட வரியை செலுத்த செப்.30ந் தேதி கடைசி நாளாகும். இந்நிலை யில் அதிகப்படியானோர் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில், உயர்த்தப்பட்ட வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2 விழுக்காடு தனி வட்டி விதிப்பில் இருந்து ஒரு  முறை விலக்கு அளிக்கப்படும்.
மாதிரி பள்ளி
சென்னைப் பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, சிறந்த தொழில்சார்ந்த உயர் கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில பயிற்சி அளிக்க நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாதிரி பள்ளியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி 11ம் வகுப்பு பயிலும் 40 மாணவர் கள், 40 மாணவிகள், 12ம் வகுப்பு பயிலும் 40 மாணவர்கள், 40 மாணவி கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்க வைத்து பயிற்சி அளிக்கப்படும். இதற்காக உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி செலவுக்காக 1.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை உயர்வு
பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கின்றனர். அத்தகையோரின் வாரிசுக்கு தடை செய்யப்பட்ட மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு  மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம்-2013ன் படி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனை 15 லட்சமாக உயர்த்தவும், 3 ஆண்டுக்கு ஒருமுறை 1.50 லட்சம் கூடுதலாக வழங்கப்படும்.
பூங்கா - பாலம்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திறந்த வெளி நிலங்களில் 315  பூங்கா, 91 விளையாட்டு திடல்கள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள வற்றை மேம்படுத்தவும் ஒப்பந்த தாரர்களுக்கு பணியாணை வழங்கப் படும். ஓட்டேரி கால்வாயில் ஆஸ்பிரின் கார்டன் 2வது தெரு - கீழ்ப்பாக்கம் தோட்டம் தெருவை இணைக்கும் பாலம் (ரூ.6.20 கோடி), கூவம் ஆற்றின் மீது சின்ன நொளம்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் ( ரூ.43.90 கோடி) மற்றும் சந்நதி முதல் தெரு - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் பாலம் (ரூ.32.21 கோடி), ஆதம்பாக்கம் ஏரியின் குறுக்கே ஜீவன்நகர் 2வது தெரு - மேடவாக்கம் பிரதான சாலையை இணைக்கும் பாலம் (ரூ.5கோடி) உள்ளிட்ட பாலங்கள் அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு பணியாணை வழங்கப்படும்.
அபராதம் அதிகரிப்பு
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை 1550 ரூபாயி லிருந்து 3 ஆயிரமாக உயர்த்துவ தோடு, மூன்றாம் நாள் முதல் பரா மரிப்பு தொகையாக 200 ரூபாய் வசூலிக்கவும் மன்றம் ஒப்புதல் வழங்கியது.

;