districts

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து

சென்னை, ஏப். 8 - முன்னாள் முதலமைச் சர் ஜெயலலிதா குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் தொடரப் பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2016ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயல லிதா குறித்து இளங்கோ வன் விமர்சித்தார். இதனை யடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ெஜகதீஷ் சந்திரா, இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தார்.