districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

விழுப்புரம்,செப்.11- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய  பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூ தியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட நான்கா வது மாநாடு மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம். மேகநாதன் தலைமை தாங்கினார்.   மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலத் தலைவர் நரசிம்மன் நிறைவுரை யாற்றினார். கடலூர் பொது மேலாளர் எஸ்.பாலச்சந்தி ரன், மாநிலப்பொருளாளர்  எஸ்.நடராஜா, மாநிலத் துணைத் தலைவர் பி.மாணிக்கம், மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முடிவில் மாவட்ட பொருளாளர் சந்திர சேகரன் நன்றி கூறினார். நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள  ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியம் மாற்றம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். மாதம் ரூ.1000 மருத்துவப்படி ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மூத்த குடி மக்களுக்கு  ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டண  சலுகையை  மீண்டும் அமல்படுத்த வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவராக என்.மேகநாதன், மாவட்டச் செயலாளராக ஐ.எம்.மதியழகன், மாவட்டப் பொருளாளராக பி.சந்திரசேகரன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.