districts

img

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்...

பெரம்பூர் பகுதி 37ஆவது வட்டம், கண்ணதாசன் நகர் 7ஆவது, 8ஆவது பிளாக் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சி உதவி பொறியாளர் சுரேஷிடம் மனு அளித்தனர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் பி.சரவணன், டி.ஆர்.தினேஷ், டி.ஞானமணி, ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.