சோத்துப்பாக்கம், அக்.28- செய்யூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய் யூர் வட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. கட்சியின் செய்யூர் வட்ட 12 வது மாநாடு சோத்துப்பாக்கத்தில் வட்டக் குழு உறுப்பினர் கோவிந்த சாமி தலைமையில் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் வெள்ளிகண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். க.புருஷோத்தமன் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் பேசினார். வட்டச் செயலாளர் எஸ்.ரவி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.சேஷாத்திரி பேசினார். நிறைவு செய்து மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா பேசினார். தீர்மானங்கள் சோத்துப்பாக்கத்தில் நிதி ஒதுக்கியும் துவங்கப்படாமல் உள்ள ரயில்வே மேம்பால பணியை உடனடியாக துவங்க வேண்டும், சென்னையில் இருந்து சூனாம்பேடு வரை இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும், சூனாம்பேடு அரசு மருத்துவமனையை முழுநேர மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும், கீழ்மருவத்தூர் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும், இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள நீர் நிலைகளை தூர்வார 100 நாள் வேலை வழங்க வேண்டும், காய நல்லூர் கிராமத்தில் உள்ள 164 பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் விபத்துகளில் படுகாயம் அடைபவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வகையில் செய்யூர் வட்டார தலைமை மருத்துவமனையை பன்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழுதேர்வு 11 பேர் கொண்ட செய்யூர் வட்டக் குழுவிற்கு க.புருஷோத்தமன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.