சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் கிரிக்கெட் குழு சார்பில் நடைபெறும் லீக் போட்டியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ15 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ7,500 வழங்கப்படஉள்ளது.