districts

img

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெற்றிக்கு  பணியாற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 31) நடைபெற்றது. பல்லாவரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இ.கருணாநிதி எம்எல்ஏ பேசினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி, மூத்த தலைவர் எஸ்.நரசிம்மன், திமுக மண்டலக்குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.