திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி (மார்ச்.22) வெள்ளியன்று நடைபெற்றது. இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் கே.நேரு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.