திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் (ஏப்.3) புதனன்று சிக்கராயபுரம் ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் திமுக நிர்வாகிகள் மா.பரிமேலழகன், எம்.வைத்தீஸ்வரன், சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் கிளைச் செயலாளர் எம்.மோகன் கே.தங்கமணி, வெங்கட்டகுரு, ராமசந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.