சமூக ஆர்வலர் டீஸ்தா செதல்வாத், பத்திரிகையாளர் ஜூபைர் உள்ளிட்டோரை ஒன்றிய அரசு கைது செய்ததை கண்டித்து செவ்வாயன்று (ஜூலை 5) சைதாப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். உடன் மமக தலைவர் பேரா.எம்.எச்.ஜவா`ஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.