districts

img

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம், வேலூர், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விழுப்புரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக் குமரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஏ.சங்கரன், மாவட்டப் பொருளாளர் எஸ்.சவரி, எஸ்சி.எஸ்டி பெடரேஷன் தலைவர் தனசேகரன், இந்திய குடியரசு கட்சி தலைவர் பி.சேகர், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் கே.சிவகுரு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிய-அம்பேத்கரிய- பெரியாரிய இயக்கங்கள் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப. செல்வன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமை யில், ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் நாகேஷ் பாபு, மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், பொருளாளர் சிவப்பிரகாஷ் ஆகியோர் பேசினர். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன் துவக்கி வைத்தும், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி நிறைவு செய்து பேசினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, விசிக மாவட்டப் பொருளாளர் சி.சஜின்குமார், மாநகர தொழிற்சங்க அமைப்பாளர் சி.ஞானசேகரன், அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பி.குப்புசாமி ஆகியோர் உரையாற்றினர். சாதி ஆணவப் படுகொலை வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்க ளுக்கு சாதி அற்றவர் என சான்று வழங்க வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும், தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

;