அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். ஜி. சேகர், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர்கள் இலகுமய்யா, பழனி, விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர், விசிக மாவட்டச் செயலாளர் பால.அறவழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசின் மத வெறுப்பு அரசியலைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் ஏழுமலை, விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் பு.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் வேலூர் குடியாத்ததில்; ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, விசிக நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.