சென்னை,ஏப்.26- சென்னை மாநகராட்சி தொழிலாளர்களுக்கு தரமான உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி செவ்வா யன்று (ஏப்.26) மண்டலம் 8 செனாய்நகர் அலுவலகம் முன்பு சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். தலைவர் எஸ்.கே.மகேந் ந்திரன், பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு, 98ஆவது மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். சென்னை மாநகராட்சி யில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் அடிப் படை வசதிகளை செய்து தர வேண்டும், டிரைசைக் கிள், காம்பாக்டர், குப்பை தொட்டி மற்றும் தரமான உதிரி பாகங்களை கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும், தூய்மை பணி தொழிலாளர்களின் விதி களை மீறி தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது, தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து பண பலன்க ளையும் உடனே வழங்க வேண்டும் என சங்க நிர்வாகி கள் வலியுறுத்தி பேசினர். இதில் துணைப் பொதுச் செயலாளர்கள் ஜி.முனு சாமி, டி.ராஜா, கே.தேவராஜ், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.