திருவண்ணாமலை, செப்.4- அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் நூறுநாள் வேலைத் திட்டம் தொடர்பான மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் ஒன்றிய அமைப்பாளர் எஸ்.முனியம்மாள் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன் ஆகியோர் நூறுநாள் வேலையை குடும்பம் ஒன்றுக்கு இருநூறு நாளாக ஆண்டொன்றுக்கு உயர்த்தவும் தொடர்ந்து விவசாய தொழி லாளர்களுக்கு வேலை வழங்கவும், சட்டக்கூலி வழங்கவும், சட்டப்படி உரிய நாட்களைக் கடந்து வேலை தராத நாட்களில் வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கவும் தினக்கூலி அறுநூறு ரூபாய் உயர்த்தவும், போதுமான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவும் வலியுறுத்திப் பேசினர். பேரூராட்சி கவுன்சிலர் கௌதம் முத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரணமல்லூர் ஒன்றிய அமைப்பாளர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக் குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, அறி வழகன், ராஜசேகரன், சந்திரிகா உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.