districts

சென்னை முக்கிய செய்திகள்

 பயிர், கால்நடைகளை இழந்த  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக 

விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டக்குழு கோரிக்கை

காஞ்சிபுரம், டிச. 6 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையாலும், மிக்ஜம் புயலால் சுமார் 10,000 ஏக்கரில்  சேதமடைந்த நெல்,  கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்க ளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், மிக்ஜம் புயல் மற்றும் மழையால்  சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய  இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவ தும் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன.

இதைப்போல பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான  ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, வேர்க் கடலை உள்ளிட்ட பயிர்களும் முழுமை யாக சேதம் அடைந்துள்ளன. லட்சக் கணக்கில் செலவு செய்து பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது ஏற்பட்டுள்ள இழப்பால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சேதங்களை கணக்கீடு செய்க  பயிர்சேதங்களை உடனடியாக கணக் கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர். அறுவடைக்கு தயாராக  இருந்த நெல் பயிர்கள் மழை நீரில்  மூழ்கி நாசமானது.  மேலும் கால்நடைகள்  இறந்து போய் உள்ளன. இதனை கருத்தில்  கொண்டு மாவட்ட ஆட்சியர்  வருவாய்த் துறையையின் மூலம் மாவட்டம் முழுவதி லும் உள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை  கணக்கெடுப்பு நடத்தி நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரமும் கால்நடைகளான (மாடுகளுக்கு) ரூ. 50,000 ஆயிரமும், வேர்க்கடலை போன்ற பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர் சேதம் காஞ்சிபுரம் வட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர்,  திருப்பெரும்புதூர் வட்டத்தில் 1500 ஏக்கர்,  வாலாஜாபாத் வட்டத்தில் 1600 ஏக்கர், உத்திரமேரூர் வட்டத்தில் 350 ஏக்கர், குன்றத்தூர் வட்டத்தில் 600 ஏக்கர், காய்கறிகள் 450 ஏக்கர், 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார்

சென்னை, டிச. 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மயிலாப்பூர் பகுதி முன்னாள் செயலாளர் ஐ.சி. பார்த்திபன் புதனன்று (டிச.6) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. நொச்சிகுப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலா ளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஜெய சங்கரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் வியாழனன்று (டிச.7) காலை  8 மணி அளவில் கிருஷ்ணாம் பேட்டை மயானத்தில் தக னம் செய்யப்பட உள்ளது.

ராஜ்நாத் சிங் இன்று வருகிறார் 

சென்னை,டிச,6 சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை சென்னை வருகிறார். ஆய்வுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு ரத்த தான முகாம்

கிருஷ்ணகிரி,டிச. 6-  ஓசூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ரத்ததான முகாமிற்கு மருத்துவர் பூபேஷ் கார்த்திக் தலைமை வகித்தார். மருத்துவர்கள் அன்பரசு,  பிரியதர்ஷினி, சூர்யா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி மருத்துவர்கள் ராகவி, ராமு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் கலந்து கொண்டனர்.

விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம்: ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி,டிச.6- விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழை பெண்கள் மற்றும்  மாற்றுத்திறனாளி பெண்கள் இலவசமாக நவீன தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற ஏழை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.72.000 க்குள் இருக்க வேண்டும்) இருப்பிடச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி). பிறப்புச் சான்று அல்லது மருத்துவரிடம் இருந்து பெறப்படும் வயது சான்று ( 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்), ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் டிச. 9 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

ரெட்டணை கிராமத்தில்   விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு 

விழுப்புரம்,டிச.6- விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை ஊராட்சிமன்றத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ரெட்டணை ஊராட்சி பகுதியில் ஆட்சியர் பழனி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை(டிச.6) ஆய்வு செய்தார். அப்போது ரெட்டணை ஊராட்சியில் தொண்டி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேம்பால பணி, அந்த ஊராட்சியில் உள்ள ஒன்றிய துவக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் அறிவை பரிசோதித்தார், அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையின் தரம் குறித்து ஆய்வு செய்தார், தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு அதற்கு பயன்படுத்தப்படும் அரிசி அதன் தரத்தையும் சோதித்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியர் சுருதி ஜெய நாராயணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை: குறைந்த வட்டியில் தாட்கோ கடன்

ராணிப்பேட்டை, டிச.6 -  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மானியத்துடன் கிரைய தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்ட தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகப் பட்சம் ரூ. 5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலங்களுக்கு 100 விழுக்காடு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப் படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரைய தொகையை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6 விழுக்காடு மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடன் பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.