districts

img

கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, டிச.25-  பெஞ்சால்  புயலால் பாதிக்கப்பட்ட பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி டிச,25 அன்று சிஐடியு சார்பில் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சமீபத்தில் தாக்கிய  பெஞ்சால் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு நிவார ணம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், பட்டு சேலைஜரிகை கோராவுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், கோரப்பட்டு விலையை குறைக்க நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நெச வாளர் சங்கத் தலைவர் இ.இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் இரா.பாரி,   சி.அப்பாசாமி பெ.கண்ணன், சிபிஎம் நிர்வாகிகள் வெ. மன்னார், ஆர். சிவாஜி, சி. ரமேஷ்பாபு, வெங்கடேசன், பாண்டியராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.