கள்ளக்குறிச்சி, ஏப்.16 - விழுப்புரம் மக்களவைத் தொகுதி திமுக ஆதரவு பெற்ற விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் பைக் பிரச்சாரம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் தலைமையில் தொகுதி முழுவதும் உற்சாகபெருக்கோடு நடைபெற்ற இருசக்கர வாகனப்பேரணியை மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பைக் பிரச்சாரம் பு.மலையனூர், கீழப்பாளை யம், எலவனாசூர்கோட்டை, செம்பியன்மா தேவி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று நிறைவடைந்தது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின்மணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ஜெயமூர்த்தி,ஆர். செல்வ ராஜ், என். கோவிந்தன், கே.அஞ்சலை, எம்.அர்ஜுனன்,பி.பாண்டியன், கிளைச் செயலாளர் கே.ரங்கதுரை, ஜே.அசாருதீன்,ஆர்.ராஜகோபால், எ.வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.