districts

img

போதை பழக்கத்திற்கு எதிராக கிரிக்கெட்...

மே தினத்தையொட்டி போதை பழக்கத்திற்கு  எதிராக ஏப்.30 அன்று வில்லிவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிறன்று (மே 7) அயனாவரத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. சங்கத்தின் பகுதி செயலாளர் ஜெ.பி.யூஜின் பர்க் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ.பார்த்திபன், செயற்குழு உறுப்பினர் எல்.விக்னேஷ், பகுதி பொருளாளர் டேவினட், துணைச்செயலாளர் பி.மாலினி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா  உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.