districts

img

100 நாள் வேலை கேட்டு சிபிஎம் மறியல்

மதுராந்தகம், டிச.27- மகாத்மா காந்தி 100 நாள் வேலை சட்டத்தின் பிரகாரம் வேலை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சியில் தாதங்குப்பம், வயலூர், பாக்கம், ஒழுப்பாக்கம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்நிலை யில், ஊராட்சியில் உள்ள கிராமங்களில் நடப்பாண்டில் இதுவரையில் முழுமை யாக 100 நாள் வேலை வழங்க வில்லை என கூறப்படுகிறது. மேலும், கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என பல முறை அதிகாரிகளிடம் அப்பகுதி கிராம மக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என தெரிகிறது. இதனால், கடந்த வாரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது டிச.26 அன்று வேலை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலு வலர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் டிச 26 அன்று வேலை வழங்கப்படாததால் பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிபிஎம் உடன் இணைந்து பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் வட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செய லாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, அச்சரப் பாக்கம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார் மாவட்ட குழு உறுப்பினர் பி.மாசிலாமணி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க. புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.