districts

img

அடிப்படை கோரிக்கைகளை சரிசெய்க: கலித்தீர்த்தாள் குப்பத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப்.23- கலிதீர்த்தாள் குப்பம் டிபிஜி நகர் பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருபுவனைத்  தொகுதிக்கு உட்பட்ட கலித்தீர்த்தாள்குப்பம் டிபிஜி நகர் பகுதி மக்களுக்கு நிரந்தரமாக சுடுகாடு அமைத்து  தர வேண்டும். குடிதண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். அப்பகுதியில் நீண்ட நாட்களாக எரியாத மின் விளக்கை சரி செய்ய வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள மதகடிப்பட்டு விநாயகர் மருத்துவ கல்லூரி சாலையை சீர் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. திருபுவனை  கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி செயலாளர் இரகு. அன்புமணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,  மாநில குழு உறுப்பினர் சங்கர், கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம், தட்சிணாமூர்த்தி, முத்து, நாகராஜ், கந்தநாதன், அமிர்தவல்லி, ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.