districts

img

சிபிஎம் வேட்பாளர்கள் மனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 9ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.கடல்வேந்தன் வேட்புமனு தாக்கல் செய்தார். பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஜி.சுகவனம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் இளவரசன் ஆகியோர் உடனிருந்தனர். கிருஷ்ணகிரி ஓசூர் மாநகராட்சி 37ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் 44ஆவது வார்டில் போட்டியிடும் எம்.எஸ்.வெண்ணிலாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


வேலூர் மாநகராட்சி 23ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஜி.கன்னியப்பன் உதவி தேர்தல் அதிகாரி எம்.ஆர்.வசந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் 12ஆவது வார்டு உறுப்பினர் சிபிஎம் வேட்பாளர் எஸ்.பார்த்திபன் உதவி தேர்தல் அதிகாரி மணிவண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.சீனிவாசன், தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன் ஆகியோர் உடன் உள்ளனர்.


ராணிப்பேட்டை நகராட்சி 4ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் தா.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட அமைப்புக் குழு கன்வீனர் என்.காசிநாதன், தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன் ஆகியோர் உடன் உள்ளனர்.


பரங்கிப்பேட்டை பேரூராட்சி 14ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராஜேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.  பேரூராட்சி திமுக முன்னாள் தலைவர் முகமது யூனுஸ், நகரச் செயலாளர் முனைவர் உசேன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலாளர் விஜய் ஆகியோர் உடனிருந்தனர்.


இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் கோட்டுச்சேரி கிளிஞ்சல்மேடு கிராம மீனவர்களை விடுதலை செய்ய ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட மீனவ பஞ்சாயத்து, நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.