districts

img

திருவொற்றியூரில் சிபிஎம் பிரச்சாரம் ...

மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் திருவொற்றியூரில் நடைபெற்ற இருசக்கர வாகன பிரச்சாரத்தை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.ஆர்.எம்.முத்துசாமி, வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் சேகுவேரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.