அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு சுவால்பேட்டை பகுதிகளில் சிபிஎம் தாலுகா செயலாளர் எ.பி.எம் சீனிவாசன் தலைமையில் ஞாயிறன்று (ஏப். 14) பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தாலுகா குழு உறுப்பினர்கள் சு. தென்னரசு, பி. சிட்டிபாபு, எம். தர்மன், பி. திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.