திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் சார்பில் மணலி பெரிய சேக்காடு, எம்.எம்.டி.ஏ. மாத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் பகுதிச் செயலாளர் டி.பாபு, சண்முகம், சிட்டிபாபு, பத்மநாபன், ருக்மாங்கதன், சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.