districts

img

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை

சென்னை, அக். 3- சென்னையில் பைக்  சாகசத்தில் ஈடுபட்ட ஹைதராபாத் இளைஞ ருக்கு நூதன நிபந்தனை தண்டனை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த மாதம் 8ஆம்  தேதி அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத் தும் விதமாக பைக் சாகசத்தில் ஒருவர் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஹாரிஸ்,  முகமது சைபான் உள்ளிட்ட 7 பேரை காவல்  துறையினர் கைது செய்து,  அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதரா பாத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் கோட்லா அலெக்ஸ் பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து பினோய்  சென்னை உயர் நீதிமன்றத் தில் முன் ஜாமீன் பெற்றார். அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நூதன நிபந்தனை ஒன்றை வழங்கியுள்ளார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட  இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண் டும் என உத்தரவிட்டார். குறிப்பாக மூன்று வாரங் களுக்கு திங்கட்கிழமை காலை 9:30 மணி முதல் 10:30  மணி வரையும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையும் விழிப்புணர்வு பிரசுரங்களை தேனாம் பேட்டை சிக்னலில் வழங்க வேண்டும். செவ்வாய் முதல்  சனிக்கிழமை வரை  5 நாட்கள் ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் அவசர பிரிவில் வார்ட் பாயாக தினசரி காலை 8 மணி  முதல் 12 மணி வரை 4 மணி  நேரம் பணியாற்ற வேண்டும்  எனவும் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திங்களன்று (அக். 3) அண்ணா அறிவலயம் அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் பினோய் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பிரசுரங்களை வழங்கினார்.

;