பெருநகர சென்னை மாநகராட்சி 41ஆவது வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆய்வு செய்தார். அப்போது மருத்துவர்களிடமும், அங்கு வரும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். உடன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிக்குழு உறுப்பினர் அ.விஜய், மூத்த உறுப்பினர் ஜோதிபாசு, திமுக வட்ட பொறுப்பாளர் தேவன் ஆகியோர் உடனிருந்தனர்.