தோழர் ஏ.ஜி. காசிநாதனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று (பிப்.13) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட குழு அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.