districts

img

 காலமானார்

ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) பர்னிஷிங் டிவிஷன் பொறுப்பாளர் வெ.குருமூர்த்தியின் தாயார்  கலாவதி (78) ஞாயிறன்று (பிப். 12) காலமானார். அவரது உடலுக்கு சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ராஜாராம், பொருளாளர் ஜோஷி, நிர்வாகிகள் மெக்கோல்ட், மோகன், சாண்டில்யன், என்.வி.கே.ராவ், சிவராஜ், நடராஜன், எம்.ராஜன், வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் திங்களன்று (பிப். 13) மாலை அயனாவரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.