திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் இறகு பந்து மகளிர் ஒற்றையர் பிரிவில், திருவண்ணாமலை எஸ்கேபி சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி கிம்லிண்ட்சே முதல் பரிசை தட்டி சென்றார். முதல் பரிசுக்கான சான்றிதழை திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் பொறியாளர் செல்வ பாலாஜி வழங்கினார்.
