சென்னை, நவ. 14- சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி தங்கள் மாணவிகளின் திறமையை மேம்படுத்தி அவர்களை தனியார் பெரு நிறுவனங்களில் பணி அமர்த்த ‘கேம்பஸ் டு கார்ப்பரேட்’ என்னும் திட்டத்திற்காக இந்திய வர்த்தகம் - தொழில்துறை கூட்டமைப்பின் ஃ பிக்கி பெண்கள் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின், பெண்கள் அமைப்பானது பயிற்சி பட்டறை, கருத்த ரங்கு, மாநாடு, திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய வற்றின் மூலம் பெண்களை தொழில்முனைவோராக்க ஊக்குவித்து வருகிறது. இந்த பெண்கள் அமைப்பு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியுடன் 1,000 மாணவிகளின் திறமையை மேம்படுத்த ஒரு புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கலை மற்றும் அறிவி யல் கல்லூரி மாணவி களை வேலை வாய்ப்புக்கு தயார்படுத்த 6 தொகுதி களை உள்ளடக்கிய திட்ட மானது பெரு நிறுவனங்க ளில் பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் அவர்களின் திறமைகளை மேம்படுத்தி அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கும் திட்டம் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பின் சென்னைக்கான தலைவர் டாக்டர் திவ்யா அபிஷேக் கூறினார்.