கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட நாககுப்பம்.பாண்டியன் குப்பம்,கல்லாநத்தம், தகரை ஆகிய ஊராட்சிகளில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.