இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, செங்கம் அரசு மருத்துவமனை மற்றும் பொது பயன்பாடு பகுதிகளில் வாலிபர் சங்க நிர்வாகிகள் தூய்மை பணியை மேற்கொண்டனர். மாவட்டச் செயலாளர் சி.எம். பிரகாஷ், நிர்வாகிகள் பி. கணபதி, எம். வடிவேல், ஜி கோபால், எம். மதன்ராஜ், விஜி, சிங்காரவேலன், டி. சுந்தரேசன் உள்ளிட்ட பலர் இந்த பணியில் ஈடுபட்டனர்.