districts

img

தேவனாம்பட்டினம் கடற்கரையில் தூய்மை பணி

கடலூர், மார்ச் 8- மத்திய கடல் பொருள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் (வெள்ளிக் கடற்கரை) தூய்மை பணி நடைபெற்றது.  இப்பணியில் மேம்பாட்டு ஆணைய இணை இயக்குநர் அன்சர் அலி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அருள் மூர்த்தி முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சிவகாமசுந்தரி பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கடலூர் வெள்ளி கடற்கரையில் குப்பை களை சேகரித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் ராமன், கட லோர காவல் படை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.