districts

சென்னை முக்கிய செய்திகள்

இளம் தொழில்முனைவோர் மாநாடு

சென்னை, ஜன,2 இளம் தொழில்முனைவோர் மையத்தின் 13-வது 'எஸ்கான்' மாநாடு, சென்னை வர்த்தக மையத்தில் வரும் 4, 5-ம் தேதிகளில் நடைபெறு கிறது. 'நோக்கத்தை நாடி' என்ற கருப்பொருளின் அடிப்படையில் வணிக உத்திகள், தலைமைத்துவ திறன்கள் குறித்து தொழில் வல்லுநர்கள் உரை யாற்றுகின்றனர். இதில் 2,500-க்கு மேற்பட்ட இளம் தொழில்முனை வோர்களும், 500-க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் பங்கேற்கின்றனர். மாநாட்டையொட்டி நடத்தப்படும் 'எஸ்மார்ட்' வர்த்தக கண்காட்சியில் தமிழகம் முழுவதும் இருந்து பதிவுசெய்த தொழில் முனை வோரின் 270 அரங்குகள் இடம்பெறவுள்ளன. மாநாட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார்.

பாகப்பிரிவினைக்கு ரூ.20 ஆயிரம்,  தொகுப்பு வீடு கட்ட மணல் எடுக்க ரூ.7,500   வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் : விவசாயிகள் குமுறல்

திருவள்ளூர், ஜன.2- முறைகேட்டில் ஈடுபடும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த  மேல்முதலம்பேடு கிராமத்தில் உள்ள கங்கப்பன் என்பவருக்கு  சொந்தமான சர்வே எண் 153 ல் 1.07 ஏக்கர்  விவசாய நிலம் உள்ளது. இதனை சுப்பிர மணி, தயாளன்,  சாமிநாதன் ஆகி யோர் பெயரில் பாகபிரிவினை செய்ய வேண்டும். இதற்காக 2024 மார்ச் மாதம் ஜமாபந்தியில் மனு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மேல்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஏ.ரவி, தயாளன், ஏழுமலை ஆகியோர் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் சரவணகுமாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டனர். பாகப்பிரிவினைக்கு ஜமா பந்தியில் மனு கொடுத்தோம்,  எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் குடும்பத்திற்கு உரிமையான சொத்தை  சகோதரர்கள் பெயரில் பாகபிரிவினை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது ஒரு பாக பிரிவுக்கு ரூ.20 ஆயிரம் வீதம், மூன்று நபர்கள் பெயரில் பிரிக்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கொடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என வட்டாட்சியர் கூறியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். வேறு வழியில்லாமல் தலைமை நில அளவையிரிடம் அன்றைய தினமே ரொக்கமாக ரூ. 40 ஆயிரம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் முழு பணத்தையும் செலுத்தினால் தான் பாகப்பிரிவினை உத்தரவு நகலில் கையொப்பம் இட முடியும் என வட்டாட்சியர் வலி யுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் 31-7-2024 அன்று  தலைமை நில அளவையர்  வங்கி கணக்கில் (கூகுள் பே மூலம்), ரூ.20 ஆயிரம் செலுத்தி யுள்ளனர். அதன் பிறகு தலைமை நில அளவை யர் முன்னிலையில் வட்டாட்சியர் கையொப்பமிட்டுள்ளார். பின்னர் 3 நாட்களில் பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் பட்டா கொடுக்காமல் ஒரு மாத காலமாக அலைகழித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால் எனக்கு எதுவும் கொடுக்கா மல் நேரடியாக வட்டாட்சியரை சந்தித்தால்,  பட்டா எப்படி வாங்கி விடுகிறாய் என்று பார்க்கலாம். நான் ஆன்லைனில் லாகிங் எடுத்தால் தான் பட்டா வழங்க முடியும் என கிராம நிர்வாக அலுவலர் ஏளன மாக பேசியதாக விவசாயிகள் கூறு கின்றனர். விவசாயிகளிடம் எந்த விசா ரணையும் நடத்தாமல் பட்டா வழங்கா மல் நிராகரிக்கப்பட்டதாக  வட்டாட்சி யருக்கு  பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சிபிஎம்  வேண்டுகோள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டக் குழு உறுப்பி னர் எம்.சி.சீனு இதுகுறித்து தெரி விக்கையில்,  மேல்முதல்பேடு கிராமத்தில் ஏழை மக்கள் தொகுப்பு வீடுகள் கட்ட சவுடு மண் எடுக்க வட்டாட்சியரிடம் அனுமதி கேட்டால் அனுமதியில்லை என்கிறார்கள். பிறகு ஒரு தொகுப்பு வீட்டிற்கு ரூ.7,500 என இரண்டு வீட்டிற்கு பணத்தை வட்டாட்சியர் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கினார். இப்படி பலரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை செய்கின்றனர். இது போன்ற அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்து  பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனர். இதுவரை இலவச பட்டா கிடைக்கவில்லை. பணம் உள்ளவர்கள் புரோக்கர்கள் மூலம் பணத்தை கொடுத்து பட்டா  வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதுவரை வழங்கியுள்ள பட்டாக்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா அல்லது பணம் பெற்றுக்கொணடு வழங்கியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கதவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

கல்பாக்கம், ஜன.2- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கம் பகுதியில் நரேஷ் என்ப வரின் வீட்டின் பின்பக் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை யடித்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த பெரிய காட்டு்ப்பாக் கம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். இவர்,புத்தாண்டு கொண்டாட்டமாக வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்றார். பின்னர், மீண்டும் வியாழனன்று காலை வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், வீட்டின் பின் பக்கம் இருந்த கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பீரோ கதவை உடைத்து அங்கிருந்த 50 சவரன் தங்கநகை மற்றும் 15 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளை யடித்து சென்றிருந்தது தெரிந்தது. தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார், விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்து கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்மோட்டார் மூலம் ஏரி பாசனம்

கள்ளக்குறிச்சி, ஜன. 2 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ரிஷி வந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூளாங்குறிச்சி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கனங்கூர் மற்றும் வேளாக்குறிச்சி ஆகிய கிராமங்களில் ஆற்றின் வாய்க்காலில் இருந்து உபரி நீரை ஏரி பாசனத்திற்கு மின்மோட்டார் மூலம் திறந்துவிடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மாவட்ட ஆட்சியர் பேசுகையில் விவசாயிகள் கோரிக்கை களை ஏற்று  மணிமுக்தாறு வாய்க்காலில் இருந்து சூளாங்குறிச்சி கிராம ஏரிக்கும், கோமுகி ஆற்று வாய்க்காலில் இருந்து கனங்கூர்,  வேளாங்குறிச்சி ஆகிய கிராமங்க ளில் உள்ள ஏரிகளுக்கும் மின்மோட்டார் மூலம் சோதனை ஓட்டமாக நீர் ஏற்றுதல் செய்யப்படுகிறது. சோதனை ஓட்டம் வெற்றியின் அடிப்படையில் மற்ற கிராமங்களுக்கும் மின் மோட்டார் மூலம் ஆற்று வாய்க்காலில் இருந்து நீர் ஏற்றம் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏரி பாசனத்தின் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இதன் மூலம்  பயனடைவார்கள். மேலும் கிராமங்களில் உள்ள குடிநீர் தேவை இதன் மூலம் சரிசெய்யப்படும். கிராமங்களில் உள்ள குடிநீர் கிணறுகளின் நீர்மட்டம் உயர்வ தோடு நிலத்தடி நீர்மட்டமும் இதன் மூலம் அதிகரிக்க வாய்ப்பாக அமையும்.இத்திட்டத்தினை விவசாயிகள் முழுமை யாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,ஒன்றியக்குழு தலைவர்கள் வடிவுக்கரசி, தாமோதரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், ஜெகன்நாதன்,செந்தில் முருகன், கொளஞ்சிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை தெரிவிக்க புதியஎண்

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை தெரிவிக்க புதியஎண் கள்ளக்குறிச்சி,ஜன.2- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தூய்மைப்  பணியாளர்களின் மறுவாழ்வு குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன்தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் தொடர்ந்து தாமதமின்றி வழங்கவும், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பான சூழ்நிலை யில் பணிபுரியும் வகையில் தேவையான பாதுகாப்பு உப கரணங்களை தொடர்ந்து வழங்க அறிவுறுத்தினார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் அனைத்து சேவைகளும் தாமதமின்றி உடனுக்குடன் வழங்கப்படுவதை சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் தவறாமல் உறுதி செய்ய வேண்டும். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தூய்மைப் பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக 011-246489 24 என்ற தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளுக்கு தாட்கோ பயிற்சி

ராணிப்பேட்டை, ஜன. 2 –  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.

தொலைந்த நகையை மீட்டுத்தந்த தூய்மைப்பணியாளர்கள்

கிருஷ்ணகிரி, ஜன.2-   தொலைந்த நகையை குப்பையில் தேடி மீட்டுத்தந்த தூய்மை பணியாளர்களை மக்கள் பாராட்டினர். ஓசூர் அருகே பேடர்பள்ளியில் மாருதி என்பவர் பேன்சி நகை கடை நடத்தி வருகிறார். இரு நாட்கள் முன்பு 2 சவரன் நகையை தாளில் சுற்றி வைத்து விட்டு அறையையும் சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளார்.மறு நாள் நகையை சரி பார்க்கும் போது இரண்டு சவரன் நகை இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பல இடத்திலும் தேடியுள்ளார்.அப்போது அங்கு வந்த வார்டு உறுப்பினர் ரஜினியுடமும் இது குறித்து தெரிவித்துள்ளார். பிறகு யோசித்துப் பார்த்த அவர் கடையை கூட்டி குப்பையை தூய்மை பணியாளரிடம் அளித்தது ஞாபகத்திற்கு வந்தது தூய்மை பணியாளர்களிடம் குப்பையில் தேடி பார்க்க கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் அமர்,தேவி குப்பை கொட்டிய இடத்தில் தேடினர்.  பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2 சவரன் கம்மல் கிடைத்தது. அதை கடைக்காரர் மாருதியிடம் கொடுத்தனர். இந்த தகவலை வார்டு உறுப்பினர் ரஜினியிடமும் துப்புரவு மேற்பார்வையாளர் யாசின், மனோஜிடமும் தெரிவித்தனர்.  நகையை பெற்றுக்கொண்ட மாருதி தூய்மை பணியாளர்கள் தேவி, அமர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். வார்டு உறுப்பினர் ரஜினி,அப்பகுதி பொதுமக்கள் கடை உரிமையாளர் அனைவரும் தூய்மை பணியாளர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்தினார்.