காஞ்சிபுரம், ஜன. 5- காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5,000 ரூபாய், 10 கிலோ உணவுப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி துணி நூல் துறை துணை இயக்கு னரிடம் காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள்ய சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.எஸ். வெங்கடேசன்மனு அளித்தார். மாவட்டச் செய லாளர் வி.சிவப்பிரகாசம், பழனி ஆகியோர் உடனி ருந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி கைத்தறி பட்டு மற்றும் நூல் நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் ரூ. 5,000, 10 கிலோ உணவுப் பொருட்கள் கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்துள்ளனர். தற்போது வரை கைத்தறி நெசவாளர்க ளுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் வானிலை வலிமண்டல சுழற்சியின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது பெரு மழை யின் காரணமாக பலரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் பல நெசவு தொழிலாளர்கள் வீடுகள் பழுதாகி உள்ளது, தறியில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் கடந்த பல மாதங்க ளாக எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் வீட்டில் முடங்கி இருக்கும் தனி யார் மற்றும் கூட்டுறவு நெசவாளர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக மழைக்கால நிவாரணமாக 5,000 ரூபாயும், அத்தியாவசிய தேவை யான மளிகை பொருட்கள் வழங்க வேண்டும்என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.