districts

img

வட சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள்

சென்னை,ஆக.31- வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும்  நீர்நிலை புனரமைப்புப் பணிகளை தலைமை செயலாளர்  நா. முருகானந் தம் வெள்ளியன்று (ஆக.30) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை, நெடுஞ் சாலைத்துறை மற்றும் பெருநகர  சென்னை மாநகராட்சி ஆகிய துறை களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலை புனரமைப்புப் பணி களை கேட்டறிந்தார்.  நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ராயபுரம் மண்டலம், வார்டு-61, பூந்த மல்லி பிரதான சாலை, காந்தி இர்வின்  பாலம் ரயில்வே பாதையின் அருகில்  ரூ.5.20 கோடி மதிப்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் அணுகு கால்வாய் மற்றும்  நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி யினைப் பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  மேலும், டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியினைப் பார்வை யிட்டு, மாணவர்கள் சேர்க்கை மற்றும்  ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து  கேட்டறிந்து, அப்பள்ளியின் அடிப் படை கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு, பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட தலைமை யாசிரியருக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-77க்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் ரூ.17.57 கோடி மதிப்பில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள நீரேற்று அறை மற்றும் இதர கட்டமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முனுசாமி கால் வாயிலிருந்து நீரேற்று நிலையத்தின் வாயிலாக பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வெளியேற்றும் செயல்பாடுகளை கேட்டறிந்தார். மேலும், மழைக்காலங் களில் இதன் செயல்பாடுகளை கண்காணித்து மழைநீர் தேங்காமல் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற் றும் நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர், வார்டு-73க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலை மழைநீர் வடிகால் அமைப்புடன் ஒருங்கிணைத்து, வடக்கு  மற்றும் தெற்கு பகுதிகளில் ரூ.2.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் தொட்டியின்  செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங் காதவாறு மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கணேசபுரம் மேம்பாலம் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும்  ரயில்வே மேம்பாலப் பணியினைப் பார்வையிட்டு, ரயில் பாதைகளின் குறுக்கே தள்ளி நகர்த்தும் (Push Through) முறையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, இப்பாலத்தின் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடித்திடவும், மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னர் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கொசஸ்தலையாற்றின் ரெட்டேரி, தெற்கு உபரிநீர்ப்பிடிப்பில் ரூ.80 கோடி  மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கி ணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், பேப்பர் மில்ஸ் சாலையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடி கால் அமைக்கும் பணியினைப் பார்வை யிட்டு, இப்பணிகளை 15 நாட்களுக் குள் விரைந்து முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். மாதவரம் வட்டத்தில் அமைந் துள்ள 3,050 மீட்டர் நீளம் கொண்ட தணி காசலம் நகர் உபரிநீர் கால்வாயில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் அகலப்படுத்தி  மேம்படுத்தும் பணியினைப் பார்வையிட்டு, இப்பணிகளை வடகிழக் குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இப்பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.