districts

சிதம்பரம் மகப்பேறு மருத்துவருக்கு விருது

சிதம்பரம், அக்.13- சிதம்பரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் பவித்ரா மணிகண்ட ராஜன். இவர் கர்ப்பப்பை  மற்றும் மார்பகப் புற்றுநோய் குறித்து அதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் பெண்களுக்கு இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது பெண்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.  சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் செல்போன் மற்றும் தொலைபேசிகள் மூலமாகவும் ஆலோசனைகளை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவரின் சேவையை பாராட்டும் வகையில், ரோட்டரி சங்கத்தின் சார்பாக மருத்துவர் பவித்ரா மணிகண்ட ராஜனுக்கு தேசிய கட்டமைப்பாளர் மற்றும் சிறந்த தொழில் சேவை விருது வழங்கப்பட்டது.