எல்ஐசி ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை கோட்ட 18வது ஆண்டு பொதுக்குழு சனிக்கிழமையன்று (மார்ச் 11) எல்எல்ஏ கட்டிடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சி.நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.குன்னிகிருஷ்ணன், சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க சென்னை பகுதி-1 தலைவர் ஆர்.ஜெயராமன், பகுதி-2 பொதுச் செயலாளர் ஆர்.சர்வமங்களா உள்ளிட்டோர் பேசினர்.