சென்னை மாநகராட்சி 140வது வட்டம் சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி அருகே மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பெண்கள் உடற்பயிற்சி கூடத்தை சனிக்கிழமையன்று (மார்ச் 9) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் எம். ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.